யானைகளைப் பராமரிக்க 843 இலட்சம் ரூபா செலவு

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர், மீட்கப்பட்ட 36 யானைகளை நிர்வகிக்க, அரசாங்கத்தால் வருடமொன்றுக்கு 843 இலட்சம் ரூபாய் செலவிடப்படுவதாக உரிமையாளரற்ற யானைகளைப் பாதுகாக்கும் அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த யானைகளை நிர்வகிப்பதற்காக, பொதுமக்களின் வரிப் பணத்தைப் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால், அனுமதிப் பத்திரங்களைக் கொண்டுள்ள உரிமையாளர்களிடம் அந்த யானைகளைக் கையளிக்க நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்திடம் அவ்வமைப்பு கோரியுள்ளது.

இது தொடர்பில், நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது கருத்துத் தெரிவித்த குறித்த அமைப்பின் ஒருங்கினைப்பாளர், கடந்த காலங்களில், பெரஹரா உள்ளிட்ட கலாசார நிகழ்வுகளின் போது, இந்த யானைகள் பயன்படுத்தப்பட்ட போதிலும், இவ்வாறான நிகழ்வுகளுக்கு யானைகளை வழங்குவதிலும் சிக்கல் நிலை காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு