கைவிடப்பட்டது பணிப்புறக்கணிப்பு – நாளை முதல் ரயில் சேவைகள் வழமைக்குத் திரும்பும்

கடந்த 07 நாட்களாக பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டு வந்த புகையிரத தொழிற்சங்கம் தமது பணிப்புறக்கணிப்பை கைவிடுவதாக அறிவித்துள்ளது.

நேற்று நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவுக்கும், குறித்த தொழிற்சங்கங்களுக்கும் இடையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்தே, இவர்கள் பணிப்புறக்கணிப்பை கைவிட்டுள்ளதாக அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய தமது கோரிக்கைகளை அமைச்சரவையில் சமர்ப்பிப்பதாக குறித்த உபகுழு வாக்குறுதி வழங்கியமைக்கு அமைவாக தமது பணிப்புறக்கணிப்பை கைவிடுவதாக புகையிரத சாரதிகளின் சங்கத்தின் பிரதான செயலாளர் இந்திக தொடங்கொட தெரிவித்துள்ளார்.

எனவே பணியாளர்கள் அனைவரையும் இன்று கடமைக்குத் திரும்புமாறும், இவர்கள் அனைவரும் பணிக்குத் திரும்பிய பின்னர் நாளை (14) காலையிலிருந்து புகையிரத சேவைகள் வழமைப்போல் இடம்பெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு