வடக்கின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்

வடமாகாண சபையின் 2018ஆம் ஆண்டிற்குரிய நிதி ஒதுக்கீடு சபையின் ஏகமனதான தீர்மானத்துடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வடமாகாண சபையின் 114வது அமர்வு நேற்று அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலைமையில் ஆரம்பமாகியது.

வடமாகாண சபையின் 2018ஆம் ஆண்டிற்குரிய நிதி ஒதுக்கீடு கடந்த 111வது அமர்வின் போது வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனினால் 26 ஆயிரத்து 754 மில்லியன் 61 ஆயிரம் சபையின் அங்கீகாரத்திற்காக முன்மொயப்பட்டு, கடந்த 03 நாட்களாக விஷேட அமர்வுகள் இடம்பெற்று, ஒதுக்கீடுகள் விவாதத்திற்குட்படுத்தப்பட்டன.

உள்ளூராட்சி மற்றும் கல்வி, விவசாயம், சுகதாரம், மீன்பிடி போக்குவரத்து, கூட்டுறவு, மகளீர் விவகாரம் உள்ளிட்ட துறைகளின் ஒதுக்கீடுகள், விவாதத்திற்குட்படுத்தப்பட்டு, அங்கீகரிக்கப்பட்டது

முதலமைச்சர் மொத்த செலவீனங்களின் அடிப்படையில் 2018ஆம் ஆண்டு ஜனவரி நிதி ஒதுக்கீடாக 26 ஆயிரத்து 754 மில்லியன் 61 ஆயிரத்தினை சபையின் அங்கீகாரத்தினை வழங்குமாறு முன்மொழிந்தார். இதனை வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசா வழிமொழிந்ததைத் தொடர்ந்து, வடமாகாண சபையின் 2018ஆம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீட்டினை சபை ஏகமனதாக அங்கீகரித்தது.

இதனை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் உத்தியோகபூர்வமாக அறிவித்து 2018ஆம் ஆண்டிற்குரிய முதலாவது அமர்வினை ஜனவரி மாதம் 9ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு