இறுதிவரை மக்களுடன் இருக்கக் கூடியவர்களைத் தெரிவு செய்யுங்கள் – சீ.வி.கே.

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இரு தோணிகளில் கால் வைப்பவர்களைத் தெரிவு செய்யாமல், மக்கள் சரியானவர்களை தெரிவு செய்ய வேண்டுமென வடமாகாண சபை அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் வலியுறுத்தியுள்ளார்.

வடமாகாண சபையின் 2018ஆம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீட்டின் மூன்றாம் நாள் விவாதம் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலைமையில் ஆரம்பமாகியது. அதன்போது, முதலமைச்சர் சரியான நேரத்தில் அவைக்கு வருகை தந்திருந்த போதிலும், ஏனைய உறுப்பினர்கள் தாமதமாக அவைக்கு வருகை தந்திருந்ததுடன், நேற்றைய தினம் முதலமைச்சர் உட்பட 15 உறுப்பினர்களே இறுதி நேரத்தில் அமர்வில் இருந்துள்ளனர்.

தேர்தல்களின் போது மக்கள் தவறிழைக்கின்றார்கள். நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மக்களுக்கு சேவை செய்ய வேண்டியவர்களை தெரிவு செய்ய வேண்டும் என்பதுடன், இரு தோணியில் கால் வைப்பவர்களை தெரிவு செய்ய வேண்டாம்.

ஜனநாயகத்தின் தூண்களாகவுள்ள ஊடகவியலாளர்கள் மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். முன்னைய காலங்களில் மக்களுக்கு சேவை செய்வதற்காகவே பலர் இருந்தார்கள். தற்போது மக்கள் பெயர்களைப் பார்த்து வாக்களிக்கின்றார்கள். மக்களுக்குச் சேவை செய்யக்கூடியவர்களையே மக்கள் தெரிவு செய்ய வேண்டும் என்றும் சீ.விகே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

சபைக்கென ஒரு நியதி இருக்கின்றது. பொதுநலன் சார்ந்து உறுப்பினர்கள் செயற்பட வேண்டும் எனவும், இரு தோணில் கால் வைப்பது சரியானதல்ல. இவைகளை மக்களுக்கு சரியான முறையில் விழிப்புணர்வினை ஏற்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு எத்தனை ஆயிரம் பேர் இருக்கின்ற போதிலும், உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மக்களுக்குச் சேவை செய்யக்கூடிய, பொது மக்கள் நலன்சார்ந்து யோசித்து இறுதி வரை மக்களுடன் இருக்கக்கூடியவர்களை தெரிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, காலை 12 உறுப்பினர்களே அவைக்கு உரிய நேரத்தில் வருகை தந்துள்ளார்கள் எனவும், வெளிமாவட்டங்களில் உள்ளவர்கள் சரியான நேரத்திற்கு வருகின்ற போதிலும், யாழ். மாவட்டத்தில் உள்ளவர்கள் சரியான நேரத்திற்கு வருவதில்லை என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஆகவே பொதுநலன் சார்ந்து, பொது மக்கள் இனிவரும் காலங்களில் மக்களுக்குச் சேவை செய்யக்கூடிய சரியான அர்ப்பணிப்புள்ளவர்களை தெரிவு செய்ய வேண்டும் என்றும் மக்களை விழிப்புணர்வுடன் செயற்படுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு