மாதாந்தம் அரிசி இறக்குமதிக்குத் தீர்மானம்

மாதாந்தம் 100,000 மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

அடுத்த ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டு வரை இவ்வாறு அரிசி இறக்குமதி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த பண்டிகைக் காலத்தில் நுகர்வோருக்கு தேவையானளவு அரிசியை தட்டுப்பாடின்றி பெற்றுக் கொள்வதற்கும், நியாயமான விலையில் பெற்றுக் கொள்வதற்குமாகவே இவ்வாறு இறக்குமதி செய்யப்படவுள்ளதாகவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்ற பொருளாதார முகாமைத்துவம் சம்பந்தமான அமைச்சரவை உபகுழுவால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

அதேவேளை தமிழ் சிங்கள புத்தாண்டு வரை தட்டுப்பாடின்றி சந்தையில் அரிசியைப் பெற்றுக் கொள்வதற்காக எந்தவொரு தனியார் வர்த்தக நிறுவனங்களுக்கும் அரிசியை இறக்குமதி செய்வதற்கான அனுமதியை வழங்குவதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு