வெளியானது தேர்தல் திகதி!!

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி நடாத்தப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.

இன்று முற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.

இதனிடையே, மீதமாகவுள்ள 248 உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் வியாழக்கிழமை நண்பகல் 12.00 மணி வரை வேட்புமனுக்களை தாக்கல் செய்யமுடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து மாவட்ட செயலாளர் காரியாலயங்களிலும் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்பதனால், காரியாலயங்களுக்கு விஷேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இன்று கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் நடைபெறவுள்ள நிலையில் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் இடையூறு ஏற்படும் வண்ணம் செய்யப்பட வேண்டாமென தேர்தல் ஆணைக்குழு அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் தேர்தல் குழுக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு