சிவனொளிபாதமலை யாத்திரிகர்களுக்கான அறிவிப்பு

சிவனொளிபாதமலைக்கு வரும் பக்தர்கள் காசல்ரீ மற்றும் மவுசாகலை நீர்நிலைகளில் நீராட வேண்டாமென பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

குறித்த நீர்நிலைகள் அடர்த்தியாகவும் கடும் குளிர்மையாகவும் காணப்படுவதனால், அவதானமாக இருக்குமாறு அவர்கள் கோரியுள்ளதுடன், ஹட்டன் வீதியூடாக செல்பவர்கள் நீராட பாதுகாப்பான இடங்கள் சில அம்பகமுவ பிரதேச சபையினால் நிறுவப்பட்டுள்ளதாகவும், அங்கு நீராடுமாறும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, சில பாதைகள் குன்றும் குழியுமாக காணப்படுவதால் சாரதிகள் அவதானமாக வாகனத்தை செலுத்துமாறும் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு