இலத்திரனியல் அட்டைகள் மூலம் மோசடி

போலி இலத்திரனியல் அட்டைகளைப் பயன்படுத்தி நிதி மோசடியில் ஈடுபட்டதான சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட மூவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

வங்கி அதிகாரிகளெனக் கூறிக்கொண்டு ஏ.டி.எம் இயந்திரங்களுக்கு முன்னால் நிற்கும் இவர்கள், அங்கு வரும் வாடிக்கையாளர்களிடம் அவர்களது அட்டைகள் பற்றிய தகவல்களை பெற்றுக்கொள்வதாக தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, அந்த தகவல்களைக் கொண்டு போலி இலத்திரனியல் அட்டைகளை தயாரித்து, 07 இலட்சத்துக்கும் அதிகமான பணம் மற்றும் பொருட்களை சந்தேகநபர்கள் கொள்ளையிட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய, சிலாபம் பகுதியில் வைத்து சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு