முல்லைத்தீவில் மர்மக் காய்ச்சல் – விஷேட குழு விரைவு

முல்லைத்தீவு மாவட்டத்தில் பரவிவரும் இனங்காணப்படாத காய்ச்சல் தொடர்பில் ஆராய சுகாதார அமைச்சின் விஷேட வைத்தியர் நிபுணர் குழு ஒன்று ஆய்வுகளை ஆரம்பித்துள்ளது.

குறித்த மாவட்டத்தில் பரவி வரும் புதுவித காய்ச்சலினால் 20 நாட்களில் 09 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தக் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டு முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஐவர் வைத்தியசாலையிலேயே உயிரிழந்துள்ளதாகவும், மேலும் நால்வர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த காய்ச்சல் தொடர்பில் எவ்வித தீர்மானத்துக்கும் வரமுடியாதுள்ளதாக வடமாகாண சுகாதார பணிப்பாளர் சுகாதார அமைச்சிடம் அறிவுறுத்தியமைக்கு அமையவே விஷேட வைத்திய நிபுணர் குழு ஒன்று முல்லைத்தீவுக்கு விஜயம் செய்து இது தொடர்பான ஆய்வுகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு