செங்கலடி வடிகானுக்குள்ளிருந்து சடலம் மீட்பு

மட்டக்களப்பு, செங்கலடி பாடசாலை வீதியிலுள்ள வடிகானுக்குள் இருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம், இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.

கொம்மாதுறை திருவள்ளுவர் வீதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான சின்னத்துரை விமலநாதன் (வயது 37) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர், நேற்று பிற்பகல் வேளை வீட்டிலிருந்து சைக்கிளில் சென்றுள்ள நிலையில், இன்று காலை 6.00 மணியளவில் செங்கலடி பாடசாலை வீதியில் சடலமாகக் கிடப்பதாக கிடைத்த தகவலையடுத்து, சடலத்தை வைத்தியசாலையில் ஒப்படைத்ததாக அவரது மனைவி பிரியதர்சினி விமலநாதன் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர்ப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு