யாழில் மீண்டும் டெங்கு அதிகரிப்பு

யாழ். குடாநாட்டில் டெங்கு நோய் தொற்று அதிகரித்து காணப்படுவதாக, மாவட்ட சுகாதார திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் இம்மாதம் 13ஆம் திகதி வரையிலான 13 நாட்களில், 311 பேர் டெங்கு நோய் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக இனங்காணப்பட்டுள்ள அதேவேளை, கடந்த நவம்பர் மாதம் 480 பேர் டெங்கு நோய் தொற்றுக்குள்ளாகியிருந்தனரெனத் தெரிவித்துள்ளார்.

டெங்கு நோயைக் கட்டுப்படுத்தும் செயற்திட்டங்கள் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, யாழ்ப்பாணம், சாவகச்சேரி, நல்லூர், கோப்பாய், உடுவில், சங்கானை, கரவெட்டி, சண்டிலிப்பாய், பருத்தித்துறை மற்றும் தெல்லிப்பளை ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டுள்ளதனால், தற்போது ஓரளவுக்கு டெங்கு நோய் தொற்று, கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு