பிரதியமைச்சர் ஒருவர் பதவி இராஜினாமா

உள்நாட்டலுவல்கள் பிரதி அமைச்சர் நிமல் லன்சா நேற்று தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

தான் நீர்கொழும்பு தேர்தல் தொகுதியின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதான அமைப்பாளர் பதவியை எதிர்பார்த்திருந்த போதிலும், அது கிடைக்காமை மற்றும் குறித்த பதவிக்கு மற்றொருவர் நியமிக்கப்படுவது தொடர்பில் தான் ஏமாற்றமடைந்துள்ளதாக முன்னாள் பிரதி அமைச்சர் நிமல் லன்ஷா ஜனாதிபதிக்கு எழுதியுள்ள இராஜினாமாக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கூட்டு எதிரணியுடன் இணைவது தொடர்பில் எவ்வித முடிவும் எடுக்கவில்லை. தற்போது இருப்பதைப் போன்றே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் என்ற வகையில் தனது கடமைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு