தொடரும் சுற்றிவளைப்புகள்

பண்டிகைக் காலப்பகுதியில் கூடுதலான விலைக்கு பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களைக் கண்டுபிடிப்பதற்கான சுற்றிவளைப்புகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுமென நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் ஹசித்த திலகரத்ன தெரிவித்துள்ளார்.

கடந்த 16ஆம் திகதி வரையில் நாடு தழுவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட 3,500 சுற்றிவளைப்புகளின் ஊடாக கூடுதலான விலைக்குப் பொருட்களை விற்பனை செய்த மற்றும் சட்டத்தை மீறிய 1,000 வர்த்தகர்களுக்கு எதிராக, சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு