சாதாரண தரத்தில் சித்தியடையாதவர்களுக்கு தொழிற்கல்வி

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடையத் தவறும் மாணவர்களுக்காக 150 தொழிற்கல்வி பாடசாலைகள் உருவாக்கப்பட்டு, அவற்றினூடாக தொழிற்கல்வியை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

பரீட்சையில் உரிய பெறுபேறுகளைப் பெற்றுக்கொண்டு உயர்தரத்தில் காலடி வைக்க முடியாத 20 ஆயிரம் மாணவ, மாணவியருக்கு குறித்த தொழிற்கல்வி நிறுவனங்கள் ஊடாக தொழிற்பயிற்சிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

13 ஆண்டுகால தொடர்ச்சியான கல்வித் திட்டத்தின் ஊடாக, மேற்படி தொழிற்பயிற்சிகள் வழங்கப்படவுள்ள நிலையில், இத்தொழிற்பயிற்சிப் பாடசாலைகள் பற்றிய விபரங்கள் எதிர்வரும் ஜனவரி மாதம் அறிவிக்கப்படவுள்ளதாகவும், கடந்த ஆண்டு இந்த தொழிற்கல்விப் பாடசாலைத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டிருந்ததாகவும் நாற்பது பாடசாலைகளில் ஆரம்பிக்கப்பட்ட இந்தத் திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அடுத்த ஆண்டு முதல் சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் அனைத்து மாணவ, மாணவியரையும், உயர் தரத்தில் இணைத்துக்கொள்வதை நோக்காகக் கொண்டு, கல்வி அமைச்சு இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு