ரஷ்யாவின் தடைவிதிப்புத் தொடர்பில் உடன் தீர்வு காண வேண்டும்

இலங்கைத் தேயிலைக்கு ரஷ்யா தடைவிதித்தமை தொடர்பில் உடனடியாகத் தீர்வு காண வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன அறிவுறுத்தியுள்ளார்.

இராஜதந்திர அனுபவம் கொண்ட அலுவலர்களை நியமித்து, இவ்விவகாரம் தொடர்பில் ஆராய்ந்து வெகுவிரைவில் தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றும், இவ்வாறான சந்தர்ப்பங்களில் இலங்கையின் பொருளாதாரத்துக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படாத வகையில் சிந்தித்து செயலாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், வர்த்தகம், பொருளாதாரம், வெளிநாட்டு மற்றும் பிற துறைகளிலுள்ள திறமைவாய்ந்த வல்லுநர்களது ஆலோசனைகளுக்கு அமைவாக செயற்படுவோமாயின் இலங்கைத் தேயிலைத் தூள் விவகாரம் தொடர்பில் தீர்வை பெற்றுக்கொடுக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தேயிலையில், பூச்சிகளின் தாக்கம் உள்ளதாக பெருந்தோட்டத்துறை அமைச்சர் உட்பட பலர் அறிக்கை விடுத்துள்ளனர். இவ்வாறு தொடர்ந்து அறிக்கை விடுத்துக்கொண்டிருந்தால், மத்திய கிழக்கு உள்ளிட்ட ஏனைய நாடுகளில், இலங்கைத் தேயிலைக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் கேள்விக்குறியாகிவிடும் என்றும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன எச்சரித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு