யாழில் விதை கிழக்கு விநியோகம்

யாழ். மாவட்டத்தில் உருளைக்கிழங்கு செய்கைக்கென 4129 அந்தர் வரையிலான விதை கிழங்குகள் எடுத்து வரப்பட்டு விநியோகிக்கப்பட்டுள்ளன.

இம்முறை உருளைக்கிழங்கு செய்கைக்கு கூடுதலான விவசாயிகள் ஆர்வம் காட்டியிருந்த போதிலும், போதியளவு கிழங்குகள் எடுத்துவரப்படாததால் செய்கையை மேற்கொள்ள முடியாத நிலை காணப்பட்டது. இந்த விதை கிழங்குகள் யாவும் செய்கையாளருக்கு ஐம்பது வீத மானிய விலையில் வழங்கப்பட்டுள்ளன.

தற்போதைய காலநிலையை பயன்படுத்தி நீர்வேலி, கோப்பாய், உரும்பிராய், ஊரெழு, புன்னாலைக்கட்டுவன் போன்ற பகுதிகளில் விவசாயிகள் விதை கிழங்குகளை நடுகை செய்து வருகின்றனர்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு