ஈ.பி.டி.பியின் அனைத்து வேட்புமனுக்களும் ஏற்பு! (Photos & Video)

வடக்குக் கிழக்கின் எட்டு மாவட்டங்களிலும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினால் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் தேர்தல்கள் அதிகாரிகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

இதற்கமைவாக, யாழ்ப்பாண மாவட்டத்தில் சாவகச்சேரி தவிர்ந்த ஏனைய 16 உள்ளூராட்சி மன்றங்களுக்குமான வேட்பு மனுக்கள் யாழ். மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்தில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று காலை தாக்கல் செய்யப்பட்டன.

வேட்புமனுத் தாக்கலின் பின்னர் டக்ளஸ் தேவானந்தா ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்துத் தெரிவிக்கும் போது…

அத்துடன், கிளிநொச்சி மாவட்டத்தில் கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம் மற்றும் கட்சியின் மாவட்ட நிர்வாகச் செயலாளரும், வடமாகாண சபை எதிர்க்கட்சி உறுப்பினருமான தவநாதன் ஆகியோரின் தலைமையில் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள அதேவேளை, திருகோணமலை மாவட்டத்தில் கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ராலின் மற்றும் கட்சியின் மாவட்ட நிர்வாகச் செயலாளர் தங்கராசா புஸ்பராசா ஆகியோரின் தலைமையில் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அதேவேளை, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார், மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களிலும் ஈ.பி.டி.பியின் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதனிடையே ஈ.பி.டி.பியினால் சாவகச்சேரி நகர சபைக்கான வேட்பு மனு கடந்த 12ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், வடக்கில் குறித்த கட்சியினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து வேட்புமனுக்களும் தேர்தல்கள் தெரிவத்தாட்சி அலுவலர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு