மேலும் இரு ஜனாதிபதி ஆணைக்குழுக்கள்

மத்திய வங்கி பிணைமுறி மோசடி குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை கிடைத்தவுடன் மிஹின் லங்கா மற்றும் ஸ்ரீலங்கன் விமான சேவைகள் குறித்து விசாரிக்க ஜனாதிபதி ஆணைக்குழுக்கள் நியமிக்கப்படுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மாளிகையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளதுடன், எத்தகைய நெருக்கடிகளுக்கு முகம்கொடுக்க நேர்ந்தாலும் தூய அரசியல் கலாசாரம் ஒன்றை உருவாக்குவதற்கான தமது முயற்சியை கைவிடப் போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கடந்த ஒன்றரை மாத காலப்பகுதியில் யார் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பிளவுபடுத்த முயற்சிக்கின்றனர் என்பது மக்களால் புரிந்துகொள்ளப்பட்டிருக்கும் என்பதுடன், நாட்டை கட்டியெழுப்புவதற்கு தூய அரசியல் கட்சியொன்றே ஆட்சிக்கு வரவேண்டும் என்றும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை தவிர ஊழல்களற்ற அரசியல் கட்சியொன்று இல்லை எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு