படகு விபத்தில் 15 பேர் பலி – ஆந்திராவில் சம்பவம்

ஆந்திர மாநிலம் அனந்தபூர் ராமர் கோயில் ஏரியில் படகு கவிழ்ந்ததால் 15 பேர் பலியாகினர்.

ஆந்திர மாநிலம், அனந்தபூர் அருகே உள்ளது ராமர் கோயிலில் கொடியேற்றும் விழா நடைபெற்ற போது, விழாவில் பங்கேற்க சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வந்திருந்தனர்.

ஒயிட்டி கிராமத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தில் 20 பேர் கொடியேற்ற விழாவைக் காண வந்திருந்தார்கள். விழா முடிந்ததும், அருகில் இருந்த ஏரியில் 15 பேர் படகு சவாரி செய்த சமயம், எதிர்பாராத விதமாக படகு கவிழ்ந்ததில் 15 பேரும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். அதில் 09 பேர் சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது.

ஆந்திர அரசு உயிரிழந்துள்ளவர்களில் சிறுவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும் பெரியவர்களுக்கு 03 லட்சம் ரூபாயும் நிவாரணம் வழங்கியுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு