தேயிலை மூலமான வருவாய் அதிகரிப்பு

சர்வதேச சந்தையில் தேயிலையின் விலை அதிகரித்தமையினால் இந்த வருடத்தின் முதல் ஒன்பது மாதங்களில் இலங்கையின் தேயிலை மூலமான வருவாய் ஆயிரத்து 139.6 மில்லியன் அமெரிக்க டொலர்களால் அதிகரித்துள்ளது.

கடந்த வருடத்தின் முதல் ஒன்பது மாத வருமானத்துடன் ஒப்பிடுகையில், இந்த வருடத்தின் வருவாய் 20 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாகவும், கடந்த வருடம் செப்டெம்பர் மாதத்தில் 114.9 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருவாயாக ஈட்டப்பட்டுள்ள நிலையில், இந்த வருடத்தின் வருவாய் 19.2 சதவீதத்தினால் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

அண்மையில் ரஷ்யாவினால் இலங்கை தேயிலைக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளமையால், இலங்கையின் தேயிலை உற்பத்தித் துறை பெரும் பாதிப்புக்கு முகம்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தேயிலை உற்பத்தித் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, ரஷ்யா இலங்கையில் இருந்து 30 தொடக்கம் 50 மில்லியன் கிலோகிராம் வரை தேயிலையை இறக்குமதி செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு