பண்டிகைக் காலத்திற்கென விஷேட சேவைகள்

விடுமுறை மற்றும் உற்சவ காலத்தை முன்னிட்டு விஷேட தொலைதூர போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குறித்த சேவைகளை வழங்கும் பொருட்டு, இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான ஆயிரம் பேருந்துகள் மேலதிகமாக சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், கொழும்பு புறக்கோட்டை பேருந்து தரிப்பிடத்தில் இருந்து இந்த சேவைகள் இடம்பெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் விழாக்காலத்தை முன்னிட்டு விஷேட போக்குவரத்து சேவையொன்றை மேற்கொள்ளவுள்ளது. கொழும்பில் இருந்து பதுளை, மொனராகலை, அம்பாறை மற்றும் கண்டி போன்ற பிரதேசங்களுக்கு இந்த விஷேட போக்குவரத்து சேவைகள் அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, பண்டிகைக்கால பாதுகாப்பு பணிகளுக்காக 4,300 பொலிஸ் அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளமைக்கு அமைவாக, உத்தியோகபூர்வ சீருடையில் 2,800 பேரும், சிவில் உடையில் 300 பேரும், போக்குவரத்து பணிகளுக்காக 1,200 பேரும் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உற்சவ காலங்களில் நகரங்களை அண்டிய பகுதிகளில் நெருக்கடியை குறைக்கும் நோக்கில் விஷேட போக்குவரத்து நடைமுறை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, அதிக சன நடமாட்டம் நிறைந்த பகுதிகளில் தமது உடமைகளை பாதுகாத்துக்கொள்வது குறித்து மக்கள் அவதானமாக செயற்பட வேண்டுமென பொலிசார் அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளனர்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு