3 இலட்சம் பேருக்கு தேசிய அடையாள அட்டை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை

தேர்தல் பதிவில் தேசிய அடையாள அட்டை இல்லாத 03 இலட்சம் பேருக்கு தேசிய அடையாள அட்டை பெற்றுக்கொடுப்பதற்கு விஷேட பிரிவொன்று உருவாக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார்.

பிறப்புச் சான்றிதழ் இல்லாதவர்களுக்கே தேசிய அடையாள அட்டை இல்லாதிருக்கின்ற நிலையில், பிறப்புச் சான்றிதழ் இல்லாதவர்களுக்கும் அடையாள அட்டையை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விஷேட திட்டத்திற்கமைய, தேசிய அடையாள அட்டை உள்ள இரண்டு உறவினர்கள் மற்றும் இரண்டு ஊர்வாசிகளின் தகவல்கள் உள்ளடக்குவதுடன், அதற்காக சத்திய கடதாசி ஒன்றும் பெறப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு