முல்லைத்தீவு நீதிமன்றில் ஏல விற்பனை

முல்லைத்தீவு நீதிமன்றத்தினால் உரிமை கோரப்படாத மோட்டார் சைக்கிள்கள் பல நேற்றைய தினம் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

கடந்த காலத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்ற போதைப்பொருள் விநியோகம், சட்டவிரோத செயற்பாடுகள் மற்றும் விபத்துக்களின் போது கைதுசெய்யப்பட்டு, நீதிமன்றத்தின் பொறுப்பில் இருந்த ஒரு தொகுதி மோட்டார் சைக்கிள்களே இவ்வாறு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

நீதிமன்ற வளாகத்தில் வைத்து மாவட்ட நீதிபதி தலைமையில் ஏல விற்பனை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தினால் கடந்த காலங்களில் சட்டவிரோத செயற்பாடுகள் மற்றும் விபத்துக்களில் உரிமையாளர்கள் இறந்த நிலையிலும், வழக்குள் முடிவடைந்த நிலையில், இதுவரை உரிமைகள் கோரப்பாடாத 28 மோட்டார் சைக்கிள்கள் இவ்வாறு ஏல விற்பனை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு