ஒப்பந்தங்களைப் பெற்றுக்கொள்ள தடைவிதிப்பு

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இருந்து தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களுக்கு உள்ளூராட்சி மன்றங்களில் ஒப்பந்தங்களை பெற்றுக்கொள்ள தடைவிதிக்கப்படுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நீர்கொழும்பு பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வில் கலந்துகொண்ட அவர் இதனைத் தெரிவித்துள்ளதுடன், மாகம்புர துறைமுகம் விற்பனைச் செய்யப்பட்ட பணம் திறைச்சேரிக்குச் செல்லவில்லை எனவும், அது இலங்கை வங்கியில் வேறு முறையில் வைப்பிலிடப்பட்டதாக தாம் அறிந்துகொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இருந்து தெரிவு செய்யப்படும் உறுப்பினர்கள், வீதி அமைப்பு உள்ளிட்ட ஒப்பந்தங்களை பெற்றுக்கொண்டு அவப்பெயர் வாங்க விரும்பவில்லை என்பதனால், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இருந்து தெரிவு செய்யப்படும் உறுப்பினர்கள் ஒப்பந்தங்களை பெற்றுக்கொள்ள தடைசெய்யப்பட்டுள்ளதாகவும் மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு