மருத்துவ அதிகாரிகள் சங்க உப செயலாளரிடம் விசாரணை

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உப செயலாளர் நலின் டி சொய்சாவிடம் பொலிசார் நேற்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இலங்கை மருத்துவ சபையின் அதிகாரிகளின் அஞ்சல்மூல வாக்களிப்புக்கான ஒரு தொகை விண்ணப்பங்கள், பலவந்தமாக பரீசிலிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பிலேயே விசாரணை இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் குறித்து மருத்துவ சங்கத்தின் பதிவாளர் மருத்துவர் டெரன்ஸ் டி சில்வாவிடமும் பாதுகாப்பு அதிகாரிகளிடமும் மருதானை பொலிசார், விசாரணை மேற்கொண்டுள்ள நிலையில், நேற்றைய தினம் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உப செயலாளர் நலின் டி சொய்சாவிடம் மூன்று மணி நேரம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு