71வது உலக அழகிப் போட்டி: மகுடம் சூடிய செக் குடியரசுப் பெண்

இந்தியாவில் நடைபெற்ற 71வது உலக அழகிப் போட்டியில் செக் குடியரசை சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா (25) என்பவர் மகுடம் சூடினார். இந்த போட்டியில், பல்வேறு நாடுகளை சேர்ந்த 117 பேர் போட்டியில் பங்கேற்றனர். இந்தியாவை சேர்ந்த சினி ஷெட்டி உள்பட 14 பேர் இறுதிப் போட்டிக்கு முன்னேறினர். இந்நிலையில், செக் குடியரசை சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா உலக அழகி பட்டத்தை வென்றார்.

Continue Reading

பணக்காரர் பட்டியலில் 3-ஆம் இடத்தில் எலான் மஸ்க்

அமெரிக்காவை சேர்ந்த உலகின் முன்னணி கோடீசுவரரும், பிரபல தொழிலதிபருமான எலான் மஸ்க் (52) உலக பணக்காரர்கள் வரிசையில் தற்போது 3-ஆம் இடத்தில் உள்ளார். முதல் இடத்தில் பிரான்ஸ் நாட்டின் ஃபேஷன் ஆடைகள் தயாரிப்பு நிறுவனமான லூயி வியுட்டன் (Louis Vuitton) நிறுவன தலைமை செயல் அதிகாரி பெர்னார்ட் அர்னால்ட் (Bernard Arnault) உள்ளார். இரண்டாம் இடத்தில் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் (Jeff Bezos) உள்ளார். 2022 அக்டோபர் மாதம் அமெரிக்காவை மையமாக கொண்ட பிரபல சமூக […]

Continue Reading

“வாட்ஸ் அப்” தகவல் பரிமாற்றம்: 22-வயது மாணவருக்கு மரண தண்டனை விதித்த நீதிமன்றம்

பாகிஸ்தானில், இறை நம்பிக்கைகளையும், இறை வழிபாட்டையும் நிந்தனை செய்வதும், பழித்து பேசுவதும், கடும் தண்டனைக்குரிய சட்டமாக கருதப்படுகிறது. ஆனால், இதுவரை அந்நாட்டில், இக்குற்றத்திற்கு பொதுவெளியில் நிற்க வைத்து அடிப்பது போன்ற தண்டனைகள் மட்டுமே வழங்கப்பட்டு வந்தன. இந்நிலையில், கடந்த 2022ல், இறை நம்பிக்கையை புண்படுத்தும் விதமாக “வாட்ஸ் அப்” செயலியில் ஆபாசமான கருத்துகளை பதிவிட்டதாக குற்றம் சாட்டி ஒரு 22-வயது மாணவர் மற்றும் 17-வயது மாணவர் ஒருவர் மீது பாகிஸ்தானின் மத்திய புலனாய்வு முகமையின் (Federal Investigation […]

Continue Reading

தான்சானியா: கடல் ஆமை கறியை சாப்பிட்ட 8 குழந்தைகள் பலி

ஜன்ஜிபார்,09 தான்சானியா நாட்டின் ஜன்ஜிபார் பகுதிக்கு உட்பட்ட பெம்பா தீவில் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என சிலர் ஆமை கறியை வாங்கி சாப்பிட்டு உள்ளனர். இதில், 8 குழந்தைகள் உயிரிழந்தனர். இதுபற்றி மாவட்ட மருத்துவ அதிகாரி ஹாஜி பகாரி ஹாஜி கூறும்போது, உயிரிழந்தவர்கள் அனைவரும் கடல் ஆமை கறியை வாங்கி சாப்பிட்டு உள்ளனர் என மருத்துவ ஆய்வக பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன. கடந்த செவ்வாய் கிழமை இந்த சம்பவம் நடந்தபோதும், திட்டு விழும் என்ற பயத்தில் இதுபற்றி […]

Continue Reading

அமெரிக்கா: விபத்தில் சிக்கிய தேசிய காவல் படை ஹெலிகாப்டர்; 2 பேர் பலி

நியூயார்க்,09 அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், ஸ்டார் கவுன்டி பகுதியில் லா குருல்லா என்ற சிறிய நகரத்தில் மெக்சிகோ எல்லையருகே தேசிய காவல் படையை சேர்ந்த ஹெலிகாப்டர் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில், தேசிய காவல் படை வீரர் மற்றும் எல்லை ரோந்து பணி ஏஜென்டுகள் 3 பேர் பயணம் செய்து கொண்டு இருந்தனர். அப்போது, ரியோ கிராண்ட் ஆற்று பகுதியருகே அவர்களின் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. இதில், 2 பேர் உயிரிழந்தனர். மற்றவர்கள் காயமடைந்தனர். இதுபற்றி டெக்சாஸ் […]

Continue Reading

பணியாளர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றுகின்றனர்: நங்கக்வா மீது அமெரிக்கா குற்றச்சாட்டு

2017ல், ஜிம்பாப்வே நாட்டில், 1980 முதல் 1987 வரை பிரதமராகவும், 1987 முதல் 2017 வரை அதிபராகவும் இருந்தவர் ராபர்ட் முகாபே (Robert Mugabe). அமெரிக்க உதவி மூலம், ராணுவ புரட்சி செய்து ஆட்சியிலிருந்த அதிபர் ராபர்ட் முகாபே-யை பதவியில் இருந்து அகற்றி, அந்நாட்டில் அதிபராக பதவியேற்றவர், எம்மர்சன் நங்கக்வா (Emmerson Mnangagwa). ஆட்சிக்கு வந்ததும் ஜனநாயக வழியில் ஆட்சியை நடத்துவதாக நங்கக்வா, அமெரிக்க அரசிடம் உறுதி அளித்திருந்தார். ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு முகாபே செய்திருந்த […]

Continue Reading

கடவுளின் தூதரை அவமதிக்கும் வகையிலான புகைப்படங்களை வாட்ஸ் அப்பில் பகிர்ந்த மாணவனுக்கு மரண தண்டனை

லாகூர், இஸ்லாமிய நாடான பாகிஸ்தானில் இஸ்லாமிய மதக்கடவுள் குறித்து, மதக்கடவுளின் இறைதூதர் குறித்து அவதூறு கருத்துகள் தெரிவித்தால், அவமதித்தால் மற்றும் மத நிந்தனையில் ஈடுபட்டால் மரண தண்டனை விதிக்கும் வகையிலான சட்டம் அமலில் உள்ளது. இஸ்லாமிய மதக்கடவுளின் இறைதூதரை அவமதிக்கும் வகையிலான கருத்துகள் அடங்கிய புகைப்படங்கள், வீடியோக்களை வாட்ஸ் அப்பில் பகிர்ந்த கல்லூரி மாணவனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்த 22 வயது கல்லூரி மாணவன் இஸ்லாமிய மதக்கடவுளின் இறைதூதர் குறித்து அவதூறு […]

Continue Reading

விமானத்தில் இருந்து வீசப்பட்ட நிவாரண பொருட்கள்: 5 பேர் பலி

காசா சிட்டி,09 இஸ்ரேல் மீது காசாவில் செயல்பட்டுவரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் இஸ்ரேலில் 1,139 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்தனர். தாக்குதல் நடத்திய ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இஸ்ரேலியர்கள் 253 பேரை காசாமுனைக்கு பணய கைதிகளாக கடத்தி சென்றனர். இந்த தாக்குதலை தொடர்ந்து காசாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழுவினர் மீது இஸ்ரேல் போர் அறிவித்தது. இதனிடையே, காசாமுனையில் உள்ள பணய கைதிகளில் 100க்கும் மேற்பட்டோரை ஒப்பந்த […]

Continue Reading

இன்று தேர்தல்: பாகிஸ்தான் அதிபராக ஆசிப் அலி தேர்வாகிறார்

இஸ்லாமாபாத்:09 பாகிஸ்தானில் கடந்த பிப்ரவரி 8-ந்தேதி நடந்த பொதுத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி ஆதரவுபெற்ற சுயேட்சை வேட்பாளர்கள் 93 இடங்களிலும், நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் 75 இடங்களிலும், பிலாவல் பூட்டோ சர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சி 54 இடங்களிலும் வெற்றி பெற்றன. இதில் நவாஸ் ஷெரீப், பிலாவல் பூட்டோ கட்சிகள் கூட்டணி அரசை அமைத்துள்ளன. பிரதமராக நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஷெபாஸ் ஷெரீப் பதவியேற்றார். இதற்கிடையே […]

Continue Reading

சுப்மன் கில் தொடக்க வரிசையில் ஆட வேண்டும்: தந்தை விருப்பம்

தர்மசாலா,09 தர்மசாலாவில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் பஞ்சாப்பை சேர்ந்த இந்திய இளம் வீரர் சுப்மன் கில் 110 ரன்கள் எடுத்து அசத்தினார். தொடக்க ஆட்டக்காரராக இறங்கி விளையாடி வந்த சுப்மன் கில், ஜெய்ஸ்வாலின் வருகைக்கு பிறகு தானாகவே 3-வது வரிசையை கேட்டு பெற்றார். இந்நிலையில் நேற்று சுப்மன் கில்லின் ஆட்டத்தை நேரில் ரசித்த அவரது தந்தை லாக்விந்தர்சிங் கூறுகையில், கில் தொடர்ந்து தொடக்க வரிசையில் விளையாடி இருக்க வேண்டும். 3-வது வரிசை […]

Continue Reading

காசாவில் உணவு பொருட்களுடன் மக்கள் மீது விழுந்த பாராசூட்: ஐந்து பேர் பலியான சோகம்

ஹமாஸ் அமைப்புக்கு எதிரான போரில் இஸ்ரேல் ராணுவம் காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மக்கள் இருக்க இடம் இல்லாமல், உணவு இல்லாமல் திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. காசாவில் நான்கில் ஒருவர் பசியால் வாடுவதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. இஸ்ரேல் ராணுவத்தின் கடும் கட்டுப்பாட்டால் மனிதாபிமான உதவிகள் மக்களுக்கு சென்றடைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் நிவாரணப் பொருட்கள் சென்ற லாரிகளை மக்கள் முற்றுகையிட்டதால், இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில் 100-க்கும் மேற்பட்ட […]

Continue Reading

அமெரிக்காவில் தாய், மகள் சுட்டுக்கொலை

வாஷிங்டன்,09 அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாகாணம் வொர்செஸ்டர் பகுதியில் கார் ஒன்று நிறுத்தப்பட்டு இருந்தது. அந்த காரில் சிறுமியுடன் அவரது தாயும் இருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற மர்மநபர்கள் திடீரென கார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் அந்த சிறுமி, தாய் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனையடுத்து அங்கு விரைந்த போலீசார் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது 2 பேர் அந்த காரை சுற்றி வளைத்து துப்பாக்கிச்சூடு நடத்தியது தெரிய வந்தது. இதுதொடர்பாக […]

Continue Reading