பிற்பகல் 2.00 மணிக்கு பின் பலத்த மழை

மேல், தென், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் இன்று (28) பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேற்கு, தெற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லி மீற்றருக்கும் அதிகளவான பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது. அதேநேரம் கிழக்கு மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும். மத்திய, சப்ரகமுவ, […]

Continue Reading

ஐ.பி.எல்.: புள்ளி பட்டியலில் அணிகளின் நிலை என்ன தெரியுமா?

சென்னை,28 17-வது ஐ.பி.எல். சீசன் கடந்த 22-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கோலாகலமாக தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 8 லீக் ஆட்டங்கள் முடிவடைந்துள்ளன. அதில் 2 ஆட்டங்களில் விளையாடி இரண்டிலும் வெற்றி பெற்றுள்ள நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் முதலிடத்தில் உள்ளது. மற்ற அணிகளில் சில தலா 1 வெற்றி பெற்ற நிலையில் ரன்ரேட் அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. லக்னோ அணி புள்ளி பட்டியலில் கடைசி […]

Continue Reading

தாய்லாந்தில் ஒரே பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம்: பெருவாரியான ஆதரவுடன் மசோதா நிறைவேற்றம்

பாங்காக்:28 தாய்லாந்தில் ஒரே பாலின திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்க வகை செய்யும் திருமண சமத்துவ மசோதா, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. எந்த பாலினத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் திருமணம் செய்தால் அவர்களுக்கு சம உரிமைகள் கிடைப்பதை இந்த மசோதா சட்டப்பூர்வமாக்குகிறது. ஏற்கனவே உள்ள சட்டத்தில் திருமண பந்தம் தொடர்பாக ஷரத்துகளில் “ஆண்கள் மற்றும் பெண்கள்” மற்றும் “கணவன் மற்றும் மனைவி” என்ற வார்த்தைகளை “தனிநபர்கள்” மற்றும் “வாழ்க்கை துணைவர்கள்” என்று மாற்றப்பட்டுள்ளது. இந்த மசோதா மீதான விவாதத்திற்குப் பிறகு […]

Continue Reading

அடுத்த தலைமுறை விமானத்தை உருவாக்கும் ஜப்பான்

டோக்கியோ,28 ஜப்பானின் பிரபல வாகன தயாரிப்பு நிறுவனமாக மிட்சுபிசி நிறுவனம், அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. பசுமை புரட்சி, புவி வெப்பமயமாதல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு உருவாக உள்ள இந்த விமானத்தில் கரியமில வாயு வெளியேற்றத்தை கட்டுப்படுத்தும் வகையில் ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜின் பயன்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஜப்பானின் தொழில்துறை அமைச்சகம் ஒப்புதல் அளிக்கப்பட்டு 2035-ம் ஆண்டுக்குள் நிறைவேற்றப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு முதல்கட்டமாக ரூ.27 லட்சம் கோடி (33 பில்லியன் […]

Continue Reading

போதைப்பொருள் வர்த்தகர்: கஹனவிடகே டொன் கந்தசேன கைது

சர்வதேச போதைப்பொருள் வர்த்தகரான கந்தசேன எனப்படும் கஹனவிடகே டொன் கந்தசேன காவல்துறை விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நுவரெலியாவில் உள்ள விடுதியொன்றில் தமது மனைவியுடன் தலைமறைவாகியிருந்த நிலையிலேயே அவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இந்தநிலையில், கிரிபத்கொடை மற்றும் கட்டுநாயக்க ஆகிய பகுதிகளில் காவல்துறை விசேட அதிரடிப்படையினரால் கடந்த 2ஆம் திகதி பறிமுதல் செய்யப்பட்ட 15 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய 10 கிலோ கிராம் ஐஸ் ரக போதைப்பொருள் குறித்த சந்தேகநபருடையது என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Continue Reading

அரிசிக்கான வரி ஒரு ரூபாவால் குறைப்பு!

ஒரு கிலோ கிராம் அரிசிக்கு 65 ரூபாவாக இருந்த விசேட பண்ட வரி இன்று (27) முதல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 03 ஆம் திகதி வரை ஒரு ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன் பெரிய வெங்காயத்தின் இறக்குமதிக்கான வரி 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரை கிலோ கிராம் ஒன்றுக்கு 10 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.

Continue Reading

யாழ். புன்னாலைக்கட்டுவன் பகுதியில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உரும்பிராய் புன்னாலைக் கட்டுவன் சந்தியில் சிறிய ரக உழவு இயந்திரத்தில் தோட்டத்திலிருந்து புற்களைளை ஏற்றுக் கொண்டிருந்த விவசாயி மீது லொறி மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. பலாலியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த லொறி வேகக்கட்டுப்பாட்டை இழந்ததில் குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தின் போது லொறியில் பயணம் செய்த சாரதி உட்பட மூவர் மது போதையில் இருந்ததாகவும் இதனால் வீதியில் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறிய ரக […]

Continue Reading

31 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது ஐதராபாத்

ஐதராபாத்:28 ஐ.பி.எல் தொடரின் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ஐதராபாத் அணி மும்பை அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் பறக்கவிட்டனர். ஹெட், அபிஷேக் சர்மா, கிளாசென் ஆகியோரின் அரைசதத்தால் இறுதியில் ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் குவித்தது. ஐதராபாத் தரப்பில் கிளாசென் 80 ரன், அபிஷேக் சர்மா […]

Continue Reading

மாஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன்: ரஷியா புதிய குற்றச்சாட்டு

ரஷியாவின் தலைநகர் மாஸ்கோவில் நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 139 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இதற்கிடையே இத்தாக்குதலில் உக்ரைனுக்கு தொடர்பு இருப்பதாக ரஷிய அதிபர் புதின் குற்றம் சாட்டினார். அதை உக்ரைன் திட்டவட்டமாக மறுத்தது. இந்த நிலையில் மாஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் உக்ரைன், அமெரிக்கா, இங்கிலாந்து இருப்பதாக ரஷியாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “மாஸ்கோவில் நடந்த தாக்குதலின் […]

Continue Reading

பிஜி தீவில் சக்திவாய்ந்த நில நடுக்கம்

தென் பசிபிக் கடலில் உள்ள பிஜி தீவு அருகே சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தலைநகர் சுவா பகுதியில் இன்று காலை ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக நிலநடுக்கம் உண்டானது. சுவாவில் இருந்து 591 கி.மீ. தென்மேற்கு பகுதியில் 10 மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கும் மையம் கொண்டதாக நில அதிர்வுக்கான தேசியமையம் தெரிவித்துள்ளது. பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்ட போதிலும் சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை. நிலநடுக்கத்தை உணர்ந்ததும் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடிவந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட […]

Continue Reading

கப்பல் விபத்து: பெரும் உயிர்ச்சேதம் தவிர்த்த இந்திய குழுவினருக்கு ஜோ பைடன் பாராட்டு

அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் படாப்ஸ்கோ நதியின் குறுக்கே உள்ள பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலத்தின் மீது நேற்று அதிகாலை சரக்கு கப்பல் ஒன்று பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் பாலம் உடைந்து தண்ணீரில் விழுந்தது. விபத்து நடந்த சமயத்தில் பாலத்தின் மீது சென்ற வாகனங்கள், பாலம் சீரமைப்பு பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் உள்ளிட்டோர் நீரில் மூழ்கினர். இந்தவிபத்தில் 6 பேர் நீரில் மூழ்கியதாக கூறப்படுகிறது. அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது.நீரில் மூழ்கிய 6 பேரும் உயிரிழந்ததாக […]

Continue Reading

புத்தூர் ஆரம்ப மருத்துவ பராமரிப்பு நிலையத்தின் செயற்பாடுகள் மீள ஆரம்பம்!

யாழ்ப்பாணம் – புத்தூர் ஆரம்ப மருத்துவ பராமரிப்பு நிலையத்தின் செயற்பாடுகள் இன்று முதல் வழமைக்கு திரும்பியுள்ளது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நடவடிக்கைக்கேற்ப சுகாதார திணைக்களத்தினால் வழங்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைய மருத்துவ பராமரிப்பு நிலையத்தின் செயற்பாடுகள் ஆரம்பமானது. புத்தூர் சந்தியில் உள்ள ஆரம்ப மருத்துவ பராமரிப்பு நிலையத்துக்கு அருகில் ஆலய திருவிழாவொன்றுக்காக தண்ணீர்ப் பந்தல் அமைத்த இளைஞர்கள் ஒலிபெருக்கியை அதிக சத்தத்தில் ஒலிக்கவிட்டிருந்தனர். கடந்த ஆண்டும் இதேபோன்று நடந்து ஆரம்ப மருத்துவ பராமரிப்பு நிலைய கண்ணாடிகள் உடைக்கப்பட்டு  […]

Continue Reading