இலங்கை வீரர் பதும் நிசங்க புதிய சாதனை!

சர்வதேச ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்த முதல் இலங்கை வீரர் என்ற சாதனையை பதும் நிசங்க பதிவு செய்தார். ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இன்று நடைபெற்ற ஒருநாள் போட்டியில் ஆட்டமிழக்காமல் 20 × 4 ஓட்டங்களும் 8×6 ஓட்டங்களும் அடங்கலாக 139 பந்துகளில் 210 ஓட்டங்களை பதும் நிசங்க பெற்றார். இந்தியாவுக்கு எதிராக சனத் ஜெயசூர்யாவின் 189 ஓட்டங்களை பெற்றிருந்த சாதனையை முறியடித்து, இலங்கைக்காக ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் வீரர் ஒருவர் பெற்ற அதிகபட்ச […]

Continue Reading

ஆப்கானிஸ்தான் – இலங்கை: சதம் கடந்தார் பெத்தும் நிஸ்ஸங்க

சுற்றுலா ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான முதலாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியின் பெத்தும் நிஸ்ஸங்க சதம் கடந்துள்ளார். பெத்தும் நிஸ்ஸங்க ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பெற்ற 04ஆவதும் சதம் இதுவாகும். இவர் 88 பந்துகளில் இவ்வாறு சதம் கடந்துள்ளார். சுற்றுலா ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான முதலாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி கண்டி – பல்லேகலை மைதானத்தில் இடம்பெறுகின்றது.

Continue Reading

இந்தியா டி20 உலகக்கோப்பையை வெல்வதற்கு அவர் தேவை: இந்திய வீரரை பாராட்டிய பிலாண்டர்

கேப்டவுன்,08 இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் 2 போட்டிகளில் ஆளுக்கு ஒன்று வெற்றி பெற்றுள்ளனர். இதில் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தது. இந்த வெற்றிக்கு இரு இன்னிங்சிலும் சேர்த்து 9 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றிய ஜஸ்பிரித் பும்ரா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். மேலும் ஐசிசி […]

Continue Reading

ஆப்கானிஸ்தான் அணியை எந்த வகையிலும் குறைத்து மதிப்பிடவில்லை: குசல் மெந்திஸ்

இலங்கை அணியை விட அதிக அனுபவம் வாய்ந்த அணியான ஆப்கானிஸ்தான் அணியை எந்த வகையிலும் குறைத்து மதிப்பிடவில்லை என  இலங்கை கிரிக்கெட் ஒருநாள் அணியின் தலைவர் குசல் மெந்திஸ் தெரிவித்துள்ளார். கண்டி பல்லேகல விளையாட்டரங்கில் இன்று (08) பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். “எங்கள் அணியை விட ஆப்கானிஸ்தான் அணி அதிக போட்டிகளில் பங்குபற்றி அனுபவம் வாய்ந்த அணியாக உள்ளது. அந்த அணியில் பல வீரர்கள் சிறப்பாக […]

Continue Reading

U19 2-வது அரையிறுதி: டாம் ஸ்ட்ரேக்கர் அபார பந்து வீச்சு- பாகிஸ்தான் 179 ரன்னில் ஆல் அவுட்

15-வது ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. சூப்பர் சிக்ஸ் சுற்று முடிவில் குரூப்1 பிரிவில் இருந்து இந்தியா, பாகிஸ்தானும், குரூப்2 பிரிவில் இருந்து ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்காவும் முறையே முதல் 2 இடங்களை பிடித்து அரையிறுதிக்கு முன்னேறின. இந்த தொடரின் முதலாவது அரையிறுதி இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இதில் இந்தியா வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்நிலையில் 2-வது அரையிறுதியில் பாகிஸ்தான் – ஆஸ்திரேலியா […]

Continue Reading

மீண்டும் விராட் கோலி விலகல்!

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகியிருந்த இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி மூன்றாவது மற்றும் நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட மாட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக இங்கிலாந்து அணியுடன் இடம்பெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் விராட் கோலி விளையாடியிருக்கவில்லை. இந்தநிலையில், அவர் இங்கிலாந்து அணியுடனான ஐந்தாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலும் விளையாடுவாரா? என்பது தொடர்பில் சந்தேகம் நிலவுவதாக இந்திய விளையாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த […]

Continue Reading

வரலாற்று சாதனைப்படைத்த ஜஸ்ப்ரித் பும்ரா! 

இந்திய வேக பந்தி வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா, டெஸ்ட் பந்து வீச்சாளர்களுக்கான ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.  டெஸ்ட் பந்துவீச்சாளர் தரவரிசையில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் முதலிடம் பிடிப்பது இதுவே முதல் முறையாகும். விசாகப்பட்டினத்தில் நடந்து முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 9 விக்கெட் கைப்பற்றியதை அடுத்து பும்ரா இந்த பெருமையை பெற்றுள்ளார். முன்னதாக, சக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான ஐசிசி தரவரிசையில் முதலிடத்தில் […]

Continue Reading

இலங்கை கிரிக்கெட் அணிக்கு புதிய சுழற்பந்துவீச்சு பயிற்றுவிப்பாளர்

இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய சுழற்பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக Craig Howard நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீலங்கா கிரிக்கெட் இதனைத் தெரிவித்துள்ளது. இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையில் இடம்பெறவுள்ள ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்போட்டி தொடருடன் அவர் இலங்கை அணியின் சுழற்பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக செயற்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. Craig Howard முன்னதாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கிரிக்கெட் ஆசோசகராக 12 வருடங்கள் செயற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். அத்துடன், நியூஸிலாந்தில் இடம்பெற்ற உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் White Ferns மற்றும் Victorian Men’s First Class […]

Continue Reading

ஒரே போட்டியில் பென் ஸ்டோக்ஸ்-ஐ பழி தீர்த்த ஷ்ரேயாஸ்

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளஇங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் நான்காம் நாளில் வெற்றி இலக்கை துரத்திய இங்கிலாந்து அணிக்கு பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார், அந்த அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ். 399 ரன்களை துரத்திய இங்கிலாந்து அணிக்கு பென் ஸ்டோக்ஸ் மற்றும் பென் ஃபோக்ஸ் கூட்டணி பொறுமையாக ரன்களை சேர்த்து வந்தது. ஸ்டோக்ஸ் […]

Continue Reading

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக முதல் இன்னிங்சில் இலங்கை வலுவான முன்னிலை

கொழும்பு,பெப்.03 இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஹஸ்மத்துல்லா ஷகிடி தலைமையிலான ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் ஆடுகிறது. இதன்படி இலங்கை- ஆப்கானிஸ்தான் இடையிலான அந்த டெஸ்ட் போட்டி கொழும்புவில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்சில் 198 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக ரஹ்மத் 91 ரன்கள் அடித்தார். […]

Continue Reading

சதம் கடந்தார் ஏஞ்சலோ மெத்யூஸ்!

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டம் தற்போது இடம்பெற்றுள்ளது. இந்த போட்டியில் ஏஞ்சலோ மெத்யூஸ் 16 ஆவது சதத்தை பெற்றுள்ளார்.  தற்போது துடுப்பெடுத்தாடி வரும் ஏஞ்சலோ மெத்யூஸ் 101 ஓட்டங்களையும், தினேஷ் சந்திமால் 90 ஓட்டங்களையும் பெற்றுள்ளனர். ஆப்கானிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 198 ஓட்டங்களை பெற்றது. அதன்படி, இலங்கை அணி தற்போது 03 விக்கெட்டுகளை இழந்து 335 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

Continue Reading

இலங்கை, ஆப்கானிஸ்தான் டெஸ்ட்..! முதல் நாள் ஆட்டம் நிறைவு!

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியின் முதலாவது நாள் ஆட்டம் நிறைவடைந்துள்ளது. இன்றைய ஆட்ட நேர முடிவின் போது தனது முதல் இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி விக்கெட் இழப்பின்றி 80 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட ஆப்கானிஸ்தான் அணிக்கு அழைப்பு விடுத்தது. அதன்படி, தனது முதல் இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 198 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. […]

Continue Reading