அவசர சிகிச்சைப்பிரிவில் எம்.கே. சிவாஜிலிங்கம்!

தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று (02) ஏற்பட்ட திடீர் உடல் நலக்குறைவால் சென்னை வடபழனி விஜயா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அவருக்கு எதிரான வழக்கொன்றிற்காக நேற்று முன்தினம் கொழும்புக்கு வருகைத்தந்த நிலையில், வழக்கு முடிவடைந்தும் அவர் நேற்று காலை சென்னைக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

Continue Reading

செப்டெம்பர் மாத இறுதியில் ஜனாதிபதி தேர்தல்: 2025 ஜனவரியில் பாராளுமன்ற தேர்தல்

ஜனாதிபதி தேர்தலை 2024 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்திலும், அதனை தொடர்ந்து பாராளுமன்ற தேர்தலை 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலும், மாகாண சபை தேர்தலை மார்ச் மாதத்திலும் நடாத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கான உத்தியோகப்பூர்வ அறிவிப்புகள் கூடிய விரைவில் வெளியிடப்பட உள்ளதுடன் பரந்துபட்ட அரசியல் கூட்டணியில் கட்சி சார்பற்ற பொது வேட்பாளராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை களமிரக்குவதற்கான தீர்மானம் ஐக்கிய தேசிய கட்சியின் நிறைவேற்றுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் நிறைவேற்றுக்குழு கூட்டம் ஜனாதிபதி […]

Continue Reading

சிறுவன் மீது பாலியல் துஷ்பிரயோகம்; இரண்டு பிக்குகள் கைது

மத்துகம பிரதேசத்தில் 13 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் இரண்டு பிக்குகள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைதான பிக்குகள் மத்துகம நவுத்துடுவ யதோல பிரதேசத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இந்த இருவர் மீதும் கிடைக்கப்பட்ட முறைப்பாட்டின் பேரில் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் பெண் தலைமை பொலிஸ் பரிசோதகர் ஹேமமாலி சந்தேக நபர்களை கைது செய்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுவன் மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இந்நிலையில், பிக்குகள் இருவரும் மத்துகம நீதவான் நீதிமன்றத்தில் […]

Continue Reading

தேரரை தாக்கியவர்களை ஏன் கைது செய்யவில்லை? அமைச்சர் விமலவீர

போராட்டத்தில் பங்கேற்பதற்கு சென்றவர்களுக்கு அறிவுரை கூறியதன் பின்விளைவே தேரர் மீதான தாக்குதலாகும்.எனினும் தாக்குதல் மேற்கொண்டவர்கள் சுதந்திரமாக நடமாடுகின்றனர்.இத்தாக்குதலுக்கு உரிய நடவடிக்கை எதுவும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டு பொலிஸார் இருக்கின்றனர்.இதனால் எமது நாட்டின் சட்டம் எங்கே செல்கின்றது என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுகின்றது என முன்னாள் வனஜீவராசிகள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரும் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான விமலவீர திசாநாயக்க தெரிவித்துள்ளார். அம்பாறையில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை(16) இரவு நடாத்திய விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து […]

Continue Reading

மலையகத்தில் தொடர்மழை – இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மலையகத்தில் தொடர்ந்து பெய்துவரும் அடைமழையினால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நேற்றுக் காலை முதல் அதிக மழை பெய்து வருகின்றமையினால் வாகனங்கள் செலுத்துவதில் சாரதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஹட்டன், நுவரெலியா உள்ளிட்ட மலையக நகரங்களிலும் ஸ்தம்பித நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Continue Reading

இரண்டு நாட்களுக்கு நாட்டில் மழை

நாளை தொடக்கம் இரண்டு நாட்களுக்கு வடக்கு, வடமத்தி, கிழக்கு, ஊவா மற்றும் தென் மாகாணங்களின் மழை வீழ்ச்சியில் அதிகரிப்பை எதிர்ப்பார்ப்பதாக வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. குறித்த பகுதிகளில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும், இன்று பிற்பகல் தொடக்கம் நாட்டின் சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.

Continue Reading

நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை

நாட்டின் பல பாகங்களில் இன்றும் மழை பெய்யக்கூடும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதற்கமைய மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் இடைக்கிடையே மழைபெய்யும் எனவும், வடமத்திய மற்றும் யாழ். மாவட்டத்தில் கூடுதலான மழையினை எதிர்பார்க்க முடியுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் ஊவா மற்றும் கிழக்கு ஆகிய மாகாணங்களில் இன்று பிற்பகல் காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும், மின்னல் மற்றும் காற்றுடனான மழைபெய்யும் சந்தர்ப்பங்களில் அவதானத்துடன் இருக்குமாறு திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

Continue Reading

குடாநாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று காற்றுடன் மழை!

நாட்டின் பல பிரதேசங்களில் இன்றைய தினம் மழையுடன், பலத்த காற்று வீசக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் ஊடாக விஷேடமாக மேல், வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும், நாட்டை சுற்றியுள்ள கடல் பிரதேசங்களிலும் ஓரளவு கடும் காற்றினை எதிர்பார்க்க முடியுமென திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். சப்ரகமுவ, மத்திய மாகாணத்திலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை பெய்யும். மேல் மாகாணம் மற்றும் வடமேல் மாகாணத்திலும், யாழ் மாவட்டத்திலும் […]

Continue Reading

காற்றின் வேகம் அதிகரிக்கலாம்

நாட்டை ஊடறுத்துச் செல்லும் காற்றின் வேகம் எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கலாமென காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. குறிப்பாக யாழ்ப்பாணம் மன்னார், ஊவா மாகாணம் மற்றும் கேகாலை மற்றும் அவிசாவளை, மாதுருஓய மற்றும் பொத்துவில் முதலான பகுதிகளில் இந்தக் காற்றின் தாக்கம் இருக்கும் என்றும் காலநிலை அவதான நிலையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, மேல், தெற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் மற்றும் புத்தளம் மாவட்டத்தின் சில பகுதிகளிலும் மழை பெய்யும் என்றும் காலநிலை அவதான நிலையம் […]

Continue Reading

12 இலட்சம் பேரைப் பாதித்த வரட்சி

நாட்டில் நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக 12 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. வரட்சி காலநிலையால் வடமாகாணம் உள்ளிட்ட குருணாகலை, அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் பாரியளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ள அதேவேளை, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, ஹம்பாந்தோட்டை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் வரண்ட காலநிலையால் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

Continue Reading

வடக்கை வாட்டும் கடும் வரட்சி

19 மாவட்டங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள வரட்சி காலநிலையால் 12 இலட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அதிகமானோர் வடக்கு மாகாணத்தை சேர்ந்த ஒரு இலட்சத்து 43 ஆயிரத்து 284 குடும்பங்களைச் சேர்ந்த 4 இலட்சத்து 49 ஆயிரத்து 989 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதேபோன்று, கிழக்கு மாகாணத்தில் 72 ஆயிரத்து 989 குடும்பங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 63 ஆயிரத்து 527 பேர் வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

Continue Reading

நீரின்றி முல்லைத்தீவு மக்கள் பாதிப்பு

முல்லைத்தீவில் குளங்களின் நீர்மட்டம் வெகுவாக குறைவடைந்து செல்வதனால் விவசாயம், நன்னீர் மீன்பிடி, நிலத்தடி நீர், விலங்குகளுக்கான குடிநீர், உள்ளிட்ட நீர்த்தேவைகளை பூர்த்தி செய்வதில் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். முல்லைத்தீவின் முக்கிய குளங்களான முத்தையன்கட்டுக் குளம், வவுனிக்குளம் என்பவற்றின் நீர்மட்டம் அடிநிலையினைச் சென்றடைந்துள்ளதன் காரணமாக இக்குளங்களின் கீழான விவசாயச் செய்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இக்குளங்களை நம்பியுள்ள ஆயிரத்துக்கும் மேலான நன்னீர் மீன்பிடி குடும்பங்கள் வறுமை நிலைமைக்குள் தள்ளப்பட்டுள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்திலே தொடர்கின்ற வரட்சி காரணமாக பல குளங்களின் நீர் […]

Continue Reading