தபால் ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு முஸ்தீபு

தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக தபால் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது.

தபால் திணைக்களத்துக்கு புதியவர்களை இணைத்துக்கொள்வது தொடர்பில் கொள்கை ஒன்றை வகுப்பதாக வழங்கப்பட்ட வாக்குறுதி தொடர்ந்தும் நிறைவேற்றப்படாமல் இருப்பதற்கு எதிர்ப்பு தெரவித்து தொழிற்சங்க நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக தபால் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டின் சகல மாவட்டங்களையும் அடிப்படையாகக் கொண்டு பிரதான நகரங்களில் எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக முன்னணியின் ஏற்பாட்டாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளதுடன், எதிர்வரும் 28ஆம் திகதிக்குப் பின்னர் ஏதாவது ஒர் தினத்தில் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தபால் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுமானால், வாக்காளர் அட்டை விநியோகம் உள்ளிட்ட பல விடயங்களுக்கு பாதிப்புக்களின் பொறுப்பை அரசாங்கம் ஏற்க வேண்டும் எனவும் தபால் தொழிற்சங்க முன்னணி மேலும் தெரிவித்துள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு