பாடசாலைகளில் டெங்கு பரவினால் பிரதானிகளே பொறுப்பு

பாடசாலை சுற்றாடலில் டெங்கு நுளம்புகள் பெருகுவதற்கான பொறுப்பை பாடசாலை பிரதானிகளே ஏற்கவேண்டுமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

டெங்கு பெருகும் விதத்தில் பாடசாலை சுற்றாடலை வைத்திருக்கும் போது அதற்காக அறவிடப்படும் அபராதத் தொகையினை செலுத்தும் பொறுப்பும் பாடசாலை பிரதானிகளுடையதென கல்வி அமைச்சின் செயலாளர் சுற்றுநிருபம் வெளியிட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தின் கீழ் பாடசாலைகளை டெங்கு வலயமற்றதாக மாற்றும் நடவடிக்கையை வெற்றிகரமாக மாற்றியமைக்க வலய கல்வி பணிப்பாளர்கள், தொகுதி கல்வி பணிப்பாளர்கள், அதிபர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஏனைய அதிகாரிகளினது ஒத்துழைப்பு அவசியமென குறித்த சுற்றுநிருபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு