பதவி விலகினார் நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ஷ

நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ஷ அரசியலமைப்பு சபையிலிருந்து விலகியுள்ளார்.

விஜயதாஸ ராஜபக்ஷ தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்துள்ளார்.

19ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக அரசியலமைப்பு சபை உருவாக்கப்பட்டது. இதில் 10 உறுப்பினர்கள் அங்கம் வகிப்பதுடன், சபாநாயகர், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவருக்கே இந்த சபையின் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த சபையின் உறுப்பினர்களாக அரசாங்கத் தரப்பில் இருவர், எதிர்க்கட்சியில் இருவர், ஜனாதிபதியின் பரிந்துரைக்கமையவும், பிரதமரின் பரிந்துரைக்கமைய ஒருவரும் சிறு கட்சிகளின் சார்பாக ஒருவரும் தெரிவு செய்யப்படுவர்.

10 உறுப்பினர்களைக் கொண்ட குழுவில் ஜனாதிபதியின் பரிந்துரைக்கு அமைய அமைச்சர் சம்பிக்க ரணவக்கவும், பிரதமரின் பரிந்துரைக்கு அமைய விஜேதாஸ ராஜபக்ஷ நியமிக்கப்பட்டிருந்தனர்.

இந்த சபையின் முதலாவது கூட்டம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில், நாடாளுமன்ற கட்டிட வளாகத்தில் 2015ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 10ஆம் திகதி நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு