7000 தொண்டர்கள் தயார் நிலையில்

செய்திகள் முக்கிய செய்திகள் 1

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் கண்காணிப்பு பணிகளுக்காக 7000 தொண்டர்களை தயார் நிலையில் இருப்பதாக பெவ்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

கொழும்பு, மருதானையில் அமைந்துள்ள சமூகநல கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், இவர்களுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாகவும், இதில் 1000 பேர் தபால்மூல வாக்களிப்பு பணிகளின் கண்காணிப்பு பணிகளிலும், 4000இற்கும் மேற்பட்டவர்கள் வாக்களிப்பு நடைபெறும் இடங்களுக்கு அனுப்பப்படவுள்ளதாகவும், 1500 பேர் 350 நடமாடும் வாகனங்கள் மூலம் நடமாடும் கண்காணிப்பு பணியிலும், ஈடுபடுத்தப்படவுள்ளதாக பெவ்ரல் அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் சுஜீவ ஜயலத் தெரிவித்துள்ளார்.