பிரதமருக்கான அமைச்சு தற்காலிகமானதே

செய்திகள் முக்கிய செய்திகள் 2

அமைச்சரவை மாற்றத்தில் சட்டம் மற்றும் ஒழுங்குகள் துறை அமைச்சு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு தற்காலிகமாகவே வழங்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தெரிவித்துள்ளது.

கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் துமிந்த திசநாயக்க இதனை தெரிவித்துள்ளதுடன், பிரதமருக்கு தற்காலிகமாகவே அந்த அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது. அது நிச்சயமாக மாற்றப்படும். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலர் வெளிநாடு சென்றுள்ள நிலையில், அமைச்சரவை மாற்றம் இரண்டு வாரங்களுக்கு பிற்போடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பிரதமரின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ள சட்ட ஒழுங்குகள் அமைச்சுப் பதவி, இரண்டு வாரங்களுக்குள் பிறிதொருவருக்கு வழங்கப்படவுள்ளதாக, அமைச்சர் ராஜித்த சேனாரத்னவை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.