ஜம்மு காஸ்மீரில் தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

இந்தியச் செய்திகள்

இந்தியா – பாகிஸ்தான் எல்லைப் பகுதியான ஜம்மு காஷ்மீரில் இராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 04 தீவிரவாதிகள் பலியானதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஷோபியன் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட பாதுகாப்பு தரப்பினர் மீது, தீவிராதிகள் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டதையடுத்து, பதில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட போதே 04 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

இதையடுத்து அந்த பகுதியில் தொடர்ந்து தேடுதல் பணிகள் இடம்பெற்று வரும் நிலையில், அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.