சாரதிகளின் பணிப்புறக்கணிப்பு

செய்திகள் முக்கிய செய்திகள் 1

சுகாதார திணைக்களத்துடன் இணைந்த அனைத்து சாரதிகளும் இன்று நாடுதழுவிய பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் சுகாதார திணைக்களத்துடன் இணைந்த சாரதிகளை வேறு திணைக்களங்களுக்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சுகாதார சாரதிகள் சங்கத்தின் தலைவர் பிரதீப் நிஷாந்த தெரிவித்துள்ளார்.

09 மாகாணங்களைச் சேர்ந்த சுகாதார சாரதிகள் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுகின்ற போதிலும், நாட்டில் நிலவும் அவசரகால நிலையை கருத்திற்கொண்டு, அவசர தேவைகளுக்கு உதவி புரிய தயாராகவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.