எரியுண்ட நிலையில் நபர் உயிரிழப்பு

செய்திகள்

பல்லம, திபிரிகொல்ல பகுதியில் நபரொருவர் எரியுண்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

தன்னுடைய வீட்டுத் தோட்டத்தை சுத்தம் செய்து குப்பைகளை எரித்த போது எரிந்துகொண்டிருந்த குப்பையில் தவறுதலாக விழுந்தே 67 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

பிரேத பரிசோதனைகள் இன்று இடம்பெறுவதுடன், சம்பவம் தொடர்பில் பல்லம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.