கண்டியில் தீவிர நிலை – மீண்டும் ஊரடங்குச் சட்டம்

செய்திகள் முக்கிய செய்திகள் 1

உடன் அமுலுக்கு வரும் வகையில் கண்டி நிர்வாக மாவட்டத்தில் மீண்டும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளதுடன், இந்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம் மறு அறிவித்தல் வரை அமுலில் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, கண்டி, மெனிக்கின்ன பிரதேசத்தில் நேற்றிரவு குழப்பம் விளைவிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட 07 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த சம்பவங்களின் போது 03 பொலிஸாரும் காயமடைந்து மெனிக்கின்ன வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்டி நிர்வாக மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்றிரவு 8.00 மணி தொடக்கம் இன்று காலை 6.00 மணிவரை ஊரடங்குச்சட்டம் அமுலில் இருந்த போதே மெனிக்கின்ன பிரதேசத்தில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.