நாட்டைக் கட்டியெழுப்ப பெண்களுக்கு அழைப்பு

செய்திகள் முக்கிய செய்திகள் 1

அமைதியும் ஒற்றுமையும் நிறைந்த நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு பாரிய சக்தியாக முன்னோக்கி பயணிக்க சகல பெண்களுக்கும் தாம் அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பொலன்னறுவையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளதுடன், சகல இனங்களும் சமாதானத்துடனும், ஒற்றுமையுடனும் வாழும் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு பங்களிப்பு வழங்குவதே தாய்மையை அடிப்படையாகக் கொண்ட பெண்கள் சமுதாயத்தின் தற்போதைய கடமையாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

தாய்மை மற்றும் பெண்களின் உரிமை தொடர்பில் அரசாங்கம் மிகுந்த பொறுப்புடன் செயலாற்றுவதாகவும், இதனூடாக, பெண்களுக்கு சமூகத்தில் கிடைக்க வேண்டிய கௌரவத்தினையும் மதிப்பினையும் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.