சட்டக்கட்டமைப்பில் மாற்றம் அவசியம்

செய்திகள் முக்கிய செய்திகள் 1

இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு தொடர்பில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமாயின், அது தொடர்பான சட்ட கட்டமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டுமென இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நிதி அமைச்சில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில், ஆணைக்குழுவின் பணிப்பாளரான ஜனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான்ன இதனை தெரிவித்துள்ளதுடன், கடந்த 21 ஆண்டுகளாக கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு சட்டத்தில் எந்தவிதமான திருத்தங்களும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

தனியார் துறையினர் கையூட்டல் பெற்றால் இந்த நாட்டில் குற்றமில்லை. இந்த நிலையில், தனியார் துறையினர் கையூட்டல் பெறுவதை குற்றமாக கருதுவது தொடர்பில் சட்ட ஏற்பாடுகளை மேற்கொள்வது குறித்து கவனம் செலுத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஊழல்களில் ஈடுபடும் பிரபலமானவர்களைச் சுற்றி பல்வேறு தொழில்துறையினர் உள்ளதாகவும், ஊழல்களில் ஈடுபட்டால், அதிலிருந்து தப்பிப்பதற்கு எந்த இடத்தை நாட வேண்டுமென அவர்கள் அறிந்து வைத்துள்ளதாகவும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.