கண்டி வன்முறை சம்பவம்: அடையாளம் காண சீ.சீ.ரீ.வி

செய்திகள் முக்கிய செய்திகள் 1

கண்டி நிர்வாக மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் அண்மையில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடையவர்களை அடையாளம் காண்பதற்காக சீ.சீ.ரீ.வி காணொளிகள் அவதானிக்கப்படுவதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சம்பவம் குறித்து விசாரணைகளை முன்னெடுக்கும் பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதுடன், அந்த சீ.சீ.ரீ.வி காணொளிகளை அவதானிப்பதற்காக பொலிஸ் விஷேட குழுவொன்றை ஈடுபடுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், வர்த்தக நிலையங்கள் மற்றும் குடியிருப்புகளுக்கு சேதம் ஏற்படுத்திய சிலர் அங்கிருந்த பொருட்களை கொள்ளையிட்டு சென்றுள்ளமை கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாகவும், அது குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.