நான் பிரதமர் பதவிக்குத் தகுதியானவன்

செய்திகள் முக்கிய செய்திகள் 1

தான் பிரதமர் பதவிக்கு தகுதியானவர் என்று சுற்றுலா மற்றும் கிறிஸ்துவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அடுத்ததாக உள்ள சிரேஷ்ட அமைச்சர் தான் என்று வத்தளை பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போது தெரிவித்துள்ளார். அத்துடன், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அடுத்து அதிக ஆண்டுகளாக பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் இரண்டாவது நபர் தான் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், பிரதமர் பதவியை கேட்கப் போவதில்லை என்றும், அவ்வாறு தந்தாலும் எடுக்கப் போவதில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.