பெரல் சங்க கைது

செய்திகள் முக்கிய செய்திகள் 2

பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய, போதைப்பொருள் வர்த்தகரான பெரல் சங்க இன்று பேஹலியகொட பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

பேஹலியகொட, மிரிஸ்வத்த பகுதியில் வைத்து பொலிஸ் விஷேட படையணியால் இவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், இதன்போது இவரிடமிருந்து போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

பாதாளக்குழு உறுப்பினர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவத்தின் கசந்தேகநபரான இவர், சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டதன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.