அவசரகால சட்டம் நீடிக்க அவசியமில்லை

செய்திகள் முக்கிய செய்திகள் 1

நாட்டில் தற்போது பிரகடனப்படுத்தப்பட்டுள்ள அவசரகால சட்டத்தை மேலும் நீடிக்க வேண்டிய அவசியம் இல்லையென சட்டம் ஒழுங்கு அமைச்சர் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

கடந்த 6ஆம் திகதி கண்டியில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களை தொடர்ந்து நாடு முழுவதிலும் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள அவசரகால சட்டமானது எதிர்வரும் வியாழக்கிழமை நள்ளிரவு முதல் நீக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.