கட்டைக்காட்டில் மீனவரின் சடலம் மீட்பு

செய்திகள் முக்கிய செய்திகள் 1

யாழ். வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியைச் சேர்ந்த மீனவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.

கட்டைக்காடு பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான தேவதாஸ் யூலி அலக்சன் (வயது 38) என்பவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

குறித்த மீனவர் கடந்த 9ஆம் திகதி மீன்பிடிப்பதற்காக கடலுக்கு சென்றிருந்த நிலையில் கரை திரும்பவில்லை. எனினும், அவரது படகு மற்றும் மீன்பிடி உபகரணங்கள் என்பன கரையொதுங்கியதைத் தொடர்ந்து, கட்டைக்காடு மீனவர்கள் இணைந்து குறித்த மீனவரை கடலில் தேடிவந்த நிலையில், குறித்த மீனவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது.