வரி செலுத்துவது தவிர்க்கப்படுகிறது

செய்திகள் முக்கிய செய்திகள் 1

வரி செலுத்த வேண்டிய வர்த்தகர்கள் பலர் அதிலிருந்து தவிர்ந்து இருப்பதாக தேசிய வருமான வரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வரி செலுத்துவதற்கு தவறுபவர்களிடமிருந்து அவற்றை அறவிடுவதற்கு எதிர்வரும் 03 மாத காலப்பகுதிக்குள் 03 இலட்சம் வரி தொடர்பான ஆவணங்கள் ஆராயப்படவுள்ளதாக தேசிய வருமான வரித் திணைக்கள ஆணையாளர் அய்வன் திசாநாயக்க தெரிவித்துள்ளதுடன், 15 இலட்சம் பேரளவில் தற்போது வரி செலுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதனூடாக கடந்த மாதம் 53 பில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டதாக தேசிய வருமான வரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.