முல்லை. விபத்தில் ஒருவர் பலி

செய்திகள் முக்கிய செய்திகள் 2

முல்லைத்தீவு, செம்மலைப் பிரதேசத்தில் நேற்றிரவு அம்பியூலன்ஸ் வண்டியுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

முல்லைதீவு, மாஞ்சோலை மருத்துவமனையில் இருந்து வெலிஓயா மருத்துவமனைக்கு நோயாளர் ஒருவரை அழைத்துச் சென்ற அம்பியூலன்ஸ் வண்டியுடன் மோட்டார் சைக்கில் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும், இதன்போது மோட்டார் சைக்கிளில் சென்ற 53 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளதாகவும் முல்லைத்தீவுப் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சடலம் தற்போது முல்லைதீவு மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.