சமூக வலைத்தளங்கள் தொடர்பில் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை

செய்திகள் முக்கிய செய்திகள் 1

தேசிய பாதுகாப்பு மற்றும் நல்லிணக்கத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விடயங்கள் சமூக வலைத்தளங்கள் ஊடாக பரவுவதை தடுப்பதற்கு குறித்த நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்வதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதேவேளை தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ள சமூக வலைத்தளங்களில் நேற்று நள்ளிரவு முதல் வைபர் வலைத்தளம் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்கள் பாவனைக்கு தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கலகம் விளைவித்தல் மற்றும் வன்முறை என்பன வேகமாக பரவுவதைத் தடுக்க முடிந்ததாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளதுடன், நாட்டின் பாதுகாப்பை மீண்டும் வழமை நிலைக்கு கொண்டுவர முடிந்துள்ளதாகவும், இதனால், சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி, சமூக விரோத மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், சமூக வலைத்தளங்கள் மீதான தடையால், வெளிநாடுகளிலுள்ள இலங்கை பணியாளர்கள் தமது உறவினர்களுடன் தொடர்பாடலை மேற்கொள்ள சிரமங்களை எதிர்நோக்கியமை தொடர்பில் அரசாங்கம் கவனத்தில் எடுத்துள்ளதுடன், வர்த்தகர்களுக்கும், இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கும் கடந்த தினங்களில் ஏற்பட்ட அசௌகரிய நிலை குறித்தும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இதுபோன்ற நிலைமை மீண்டும் ஏற்படாமலிருப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள தற்போது தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ள ஏனைய சமூக வலைத்தளங்கள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்திவரும் நிலையில், உரிய பாதுகாப்பு மற்றும் ஏற்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்த பின்னர், அந்த சமூக வலைத்தளங்களுக்கு பிரவேசிப்பதற்கான வாய்ப்பை ஏற்பட்டு முடியுமெனத் தாம் நம்பிக்கை கொள்வதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.