ஜேம்ஸ் அண்டர்சனுக்கு தொடர்ந்தும் தலைவர் பதவி?

விளையாட்டு

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் உபதலைவராக தொடர்ந்தும் ஜேம்ஸ் அண்டர்சனையே பேணுவதற்கு இங்கிலாந்து கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.

இங்கிலாந்து அணிக்கு உபதலைவராக இருந்த பென் ஸ்டாக்ஸ், தாக்குதல் சம்பவம் ஒன்றில் தொடர்பு கொண்டுள்ளமையால், அணியிலிருந்து சிறிது காலம் நீக்கப்பட்டு, அண்டர்சன் உபத்தலைவராக நியமிக்கப்பட்டார்.

தற்போது பென் ஸ்டாக்ஸ{க்கு அணியில் மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ள நிலையில், உபதலைவர் பதவியையையும் பென் ஸ்டாக்ஸ{க்கு வழங்க வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்ட போதிலும், பென் ஸ்டாக்ஸின் வழக்கு விசாரணைகள் தொடர்ந்து இடம்பெறவுள்ள நிலையில், அன்டர்சனையே தொடர்ந்தும் உபதலைவராக பேணுவதற்கு இங்கிலாந்து கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.