அமெரிக்கத் தூதுவரின் எச்சரிக்கை

செய்திகள் முக்கிய செய்திகள் 1

நீண்ட காலமாக நீடிக்கும் சமூக வலைத்தளங்கள் மீதான தடையானது, பல்வேறு துறைகளிலும் பாதிப்பை ஏற்படுத்துமென இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சுற்றுலாத்துறை, தகவல் தொழில்நுட்பம், வர்த்தகம் மற்றும் நாட்டின் நற்பெயரைக் கொண்ட சுதந்திரம் மற்றும் வெளிப்படைத் தன்மை என்பனவற்றுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பெரும்பாலான இலங்கையர்கள் வெளிநாடுகளிலுள்ள தமது உறவினர்களுடன் தொடர்புகளை மேற்கொள்ள சமூக வலைத்தளங்களையே நம்பி இருப்பதாகவும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் சுட்டிக்காட்டியுள்ளார்.